ஜார்கண்ட் காவல் தேர்வில் அதிர்ச்சி.. அடுத்தடுத்து பலியான 12பேர்.. ஷாக்கில் மாநில அரசு!

 
போலீஸ் தேர்வு

ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தில், காவல்துறை பணிக்கு சுமார் 1,27,772 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 21,582 பேர் பெண்கள் உட்பட 78,023 பேர் தகுதி பெற்றுள்ளனர். ஆக., 22ல் துவங்கிய ஆள்சேர்ப்பு பணி, செப்., 3ம் தேதி வரை, 7 மையங்களில் நடக்கும் என, தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், உடல் தகுதிக்கு தேர்வானவர்களுக்கு, 10 கி.மீ., ஓட்டம் நடந்தது. இதையடுத்து கடும் வெயிலில் ஓடிய 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


இதில் 12 பேர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தனர். அவர்களின் மரணம் இயற்கைக்கு மாறானதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மரணத்திற்கான சரியான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே உடற்தகுதி தேர்வில் இறந்தவர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியிருக்கலாம் அல்லது சுட்டெரிக்கும் வெயில் கூட அவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, மதியம் நடைபெறும் உடற்தகுதி தேர்வை மாலை 4:30 மணிக்கு மாற்றி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், அனைத்து மையங்களிலும் மருத்துவக் குழுக்கள், மருந்துகள், ஆம்புலன்ஸ், நடமாடும் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட போதிய ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஹேமந்த் சோரன் அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குகிறதா அல்லது மரணத்தை தருகிறதா என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. ஹேமந்த் சோரன் அரசின் நிர்வாகத்தாலும், பிடிவாதத்தாலும், உடல் தகுதித் தேர்வு சாவுக்கான ஓட்டப் பந்தயமாக மாறியுள்ளது” என்று பாஜக மாநிலத் தலைவர் பாபுலால் மராண்டி எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார். மேலும் உயிரிழப்புக்கு உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web