அதிர்ச்சி.. ஜிம் டிரெய்னர் மயங்கி சரிந்து பலி... உடற்பயிற்சி செய்த போது சோகம்!

 
ஜிம் டிரெய்னர்

சமீபகாலமாக இளைஞர்களின் திடீர் மரணங்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்த போது சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மணமேடையில் மரணம், விளையாடிய போது மரணம், பள்ளி மாணவன் மயங்கி பலி, நடனம் ஆடிய போது பலி என திடீர் மரணங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலையளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாறீ வரும் உணவு பழக்க வழக்கங்கள் , வாழ்க்கை முறை என எத்தனை சமாதானங்கள் கூறினாலும் அதை இந்த இளவயது மரணங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு விரிவாக்கம் ஞானமூர்த்தி நகர் மகாத்மா காந்தி தெருவில் வசித்து வருபவர்   யோகேஷ் . இவர்  பாடி பில்டராக கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றவர்.  2021ல் மட்டும்  சுமார் 9க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டார்.   2012ல்   மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தையும் பெற்றுள்ளார்.

மாரடைப்பு

 2021ல்  வைஷ்ணவியுடன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு  2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்குப் பிறகு தீவிர பாடி பில்டிங்கில் இருந்து ஒதுங்கிய அவர் பல்வேறு ஜிம்களில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார்.   நேற்று காலை முதல் மாலை வரை ஜிம்மிற்கு வந்திருந்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்த பிறகு வீட்டிற்கு செல்வதற்கு முன் மாலை 5.45 மணியளவில் கழிவறைக்கு சென்ற அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறி மயங்கி அங்கேயே விழுந்துள்ளார்.

ஆம்புலன்ஸ்

இந்நிலையில் கழிவறைக்கு சென்றவர் வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உடன் பயிற்சி மேற்கொண்டவர்கள் கழிவறை கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அங்கு அவர் மயங்கி நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 
அப்போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவர் திருமணத்திற்கு பிறகு தீவிர பாடி பில்டிங்கில் ஈடுபடாத நிலையில் சம்பவத்தன்று அவர் அதிக அளவிலான எடைகளை தூக்கியதாக கூறப்படுகிறது. இதனாலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web