ஜியோ அதிரடி ஆபர்...!! வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

 
ஜியோ

இந்திய தொலைத்தொடர்பு துறையில்  2016 ல் தொடங்கப்பட்டது. இதன் பிறகு இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.  தொடக்கத்தில் ஒரே ஒரு ஜிபி டேட்டாவை ரீசார்ஜ் செய்து அதை வைத்தே மாதம் முழுமைக்கும் பயன்படுத்தி வந்தனர்.  செல்போன் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா உபயோகத்திற்காக தடுமாறிக் கொண்டிருந்தவர்கள் எந்நேரமும் ஆன்லைனில்   அளவளாவிக் கிடக்கின்றனர்.  ஜியோவின்  4 ஜியால் இந்தியாவில் தனிப்பட்ட மற்றும் தொழில்துறை சார்ந்த மாற்றங்களுக்கு வித்திட்டது.  

ஜியோ
இந்த மாற்றங்களை நிகழ்த்திய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 7ம் ஆண்டு பயணத்தை முன்னிட்டு, சில சலுகை அறிவிப்புகளை தனது ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கு ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல்  செப்டம்பர் 30 வரை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த புதிய  உத்தரவை பெறலாம்  ரூ.299, ரூ.749 மற்றும் ரூ.2,999 ஆகிய ரீசார்ஜ் திட்டங்களில் கூடுதல் டேட்டா மற்றும் சிறப்பு வவுச்சர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரூ.299 திட்டத்தின் கீழ், தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் இலவச 100 எஸ்எம்எஸ் இவைகளுக்கு  28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.  சிறப்புச் சலுகையாக 7ஜிபி டேட்டாவை கூடுதலாக பெறலாம்.

இறங்கி அடிக்கும் ஜியோ! இனி எல்லாத்திலயும் ஜியோ தான்
ரூ.749 திட்டத்தின்படி  நாளொன்றுக்கு  2 ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் வழங்கப்படும். இவைகளுக்கான வேலிடிட்டி  90 நாட்கள் வேலிடிட்டி.   சிறப்புச் சலுகையாக 14ஜிபி கூடுதல் டேட்டாவை ஜியோ அறிவித்துள்ளது. அடுத்தபடியாக ரூ.2999 திட்டத்தின் கீழ் தினசரி 2.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் அனைத்தும்  365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.  கூடுதல் சலுகையாக 21ஜிபி டேட்டாவை, தலா 7 ஜிபி என 3 கூப்பன்கள் வாயிலாக ஜியோ வழங்குகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web