இன்று முதல் ஜியோ ஏர்ஃபைபர்.. ஹைஸ்பீட் இண்டர்நெட்.. அட்டகாச ஆரம்பம்!!

 
ஜியோ ஏர் பைபர்

தொலைத்தொடர்பு ,இண்டர்நெட் சேவைகளில் தனக்கென தனி இடத்தை பிடித்த நெட்வொர்க்குகளில் ஜியோமுண்ணனியில் இருந்து வருகிறது.  இந்தியாவில் மிகக் குறுகிய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் வேரூன்றியது ஜியோ நிறுவனம். பயனர்களின் வசதிகள், தொழில் நுட்ப மேம்பாடு இவைகளுக்காக ஜியோ அடுத்தடுத்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி  இந்திய சந்தையில் ஜியோ நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் இன்டர்நெட் சேவையான ஜியோ ஏர்ஃபைபரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ஜியோ


வீடு மற்றும் அலுவலகங்களில் எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் ஜியோ ஏர்ஃபைபர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நொடிக்கு 1.5 ஜிகா பிட் வேகத்தில் இன்டர்நெட் இணைப்பை இதன் மூலம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் மூலம் பயனர்களுக்கு தனித்துவ அனுபவம் ஏற்படும் என  ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.

ஜியோ
ட்ரூ 5ஜி இணைப்பில் ஜியோ ஏர்ஃபைபர் இயங்க உள்ள  இதன் சேவை நாடு முழுவதும் விரைவில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.பிளக்-அண்ட்-பிளே மோடில் இதை எளிதில் நிறுவிக் கொள்ளலாம்.  பர்சனல் ஹாட்ஸ்பாட் போல இந்த ஜியோ ஏர்ஃபைபர் இயங்கும்  . பாயிண்ட்-டு-பாயிண்ட் ரேடியோ லிங்க் மூலம் இது இயக்கப்படுகிறது. இதனை இயக்க  வயர்லெஸ் சிக்னல்கள் பயன்படுத்தப்படுகிறது.நொடிக்கு 1.5 ஜிகா பிட் என்ற வேகத்தில் இன்டர்நெட் இணைப்பை பெறலாம். பிராட்பேண்ட் இணைப்புடன் ஒப்பிடும் போது ஜியோ ஏர்ஃபைபரின் விலை   ரூ.6,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இத்துடன் பேரன்டல் கன்ட்ரோல் டூல், Wi-Fi 6 சப்போர்ட், ஜியோ செட்-டாப் பாக்ஸுடன் ஒருங்கிணைப்பு போன்றவற்றை ஜியோ ஏர்ஃபைபர் உள்ளடக்கியது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web