ஜியோ பயனர்களே உஷார்... 3 மாத இலவச ரீசார்ஜ்... இந்த லிங்கை கிளிக் பண்ணாதீங்க!
இந்திய பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளையமகன் திருமணம் வெகு பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. சுமார் ரூ5000 கோடி செலவில் நடைபெற்ற இந்த திருமணத்தில் உலகம் முழுவதும் இருந்து அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் , திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு இலவசமாக மூன்று மாத ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ வழங்குவதாக போலியான மெசேஜ் வாட்ஸ் அப்பில் உலா வருகிறது.
இந்தியில் எழுதப்பட்ட இந்த மெசேஜ் இலவச ரீசார்ஜ் சலுகையை பெறுவதற்கு ஒரு லிங்கை கிளிக் செய்ய வேண்டும் என பயனர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படுகிறது.

இந்த சலுகை முற்றிலும் போலியானது. ஜியோ நிறுவனம் பயனர்களுக்கு எந்த வித இலவச ரீசார்ஜ் திட்டத்தையும் வழங்கவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளது. இது போன்ற செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
