டிகிரி படிச்சாலே போதும்... ரிசர்வ் வங்கியில் 450 பணியிடங்கள்...!!

 
ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகத்திலும், கிளை அலுவலகங்களிலும்  காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆர்பிஐ ரிசர்வ்
பதவி: உதவியாளர்
பணியிடங்கள்: 450
இதில், பொதுப் பிரிவினருக்கு 241 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 71 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 37 இடங்களும் , 48 இடங்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கும், 64 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில் மட்டும் 13 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி: பட்டப்படிப்பில் 

சம்பளம்: மாதம் ரூ. 20,700 முதல் ரூ. 55,700

வயது வரம்பு:20-28 வயது வரை  எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகைகள் வழங்கப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வுகளைத் தொடர்ந்து மொழித் திறன் தேர்வு நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதல்நிலை எழுத்துத் தேர்வு   21.10.2023, 23.10.2023 தேதிகளிலும், முதன்மைத் தேர்வு 02.12.2023 தேதிகளில்  நடைபெறலாம். 
 வேலை வாய்ப்பு

 


விண்ணப்பக் கட்டணம்:

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர்  ரூ.50 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.450 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.10.2023

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web