+2 முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு... தேர்வு கிடையாது... ரூ.1,77,500 வரை சம்பளம் .. நவ.5 கடைசி தேதி!

 
மாணவிகள்

12ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்களுக்கு அருமையான வேலை வாய்ப்பு. தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் திறமையும், தகுதியும் வாய்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் (IWAI) 14 காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. எழுத்தர், சர்வேயர் மற்றும் முதுநிலை கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் நவம்பர் 5ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலை வாய்ப்பு

Lower Division Clerk (LDC) பணிக்கு 4 இடங்கள் காலியாக உள்ளன. இதற்குத் தகுதி, பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன்.

சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். Junior Hydrographic Surveyor பணிக்கு 9 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு சிவில் இன்ஜினீயரிங் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும்.

வேலை வாய்ப்பு

Senior Accounts Officer பணிக்கு 1 இடம் காலியாக உள்ளது. சிஏ முடித்தவர்களும் அல்லது செலவுகள் மற்றும் பணி கணக்காளர் பிரிவின் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். தேர்வு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நடைபெறும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணத்தில் விலக்கு பெறுவர்; மற்றவர்களுக்கு ரூ.500 கட்டணம். விண்ணப்பங்கள் 5.11.2025க்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!