ஜோ பைடன் விலகிடுவார்... வைரலாகும் விவேக் ராமசாமியின் கணிப்பு வீடியோ; எலோன் மஸ்க் கருத்து!

 
பைடன் விவேக் ராமசாமி

நேற்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்த பிறகு , கடந்த ஆண்டு GOP ஜனாதிபதி விவாதத்தில், விவேக் ராமசாமி இந்த போட்டியில் இருந்து ஜோ பைடன் வெளியேறுவார் என்று பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில், 38 வயதான விவேக் ராமசாமி, தேர்தலில் இருந்து ஜோ பைடன் வெளியேறுவார் என்று கணித்து பேசியிருக்கிறார். வீடியோவில், "ஜனநாயகக் கட்சிக்கு ஒரு செய்தியுடன் நானும் மூட விரும்புகிறேன். ஜோ பைடன் செய்யப்போகும் இந்த கேலிக்கூத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும். அவர் அமெரிக்க ஜனாதிபதி அல்ல என்பதை நாங்கள் அறிவோம். பைடன் இப்போது அவரது வேட்புமனுவை ஒதுக்கித் தள்ள வேண்டும், எனவே அது நியூசோமா அல்லது மிச்செல் ஒபாமாவா அல்லது வேறு யாராக இருந்தாலும் எங்களிடம் யார் வேட்பாளர் என்கிற உண்மையைச் சொல்லுங்கள் என்று பேசியிருக்கிறார்.

சமூக ஊடகப் பயனர்கள் ராமசாமியின் தொலைநோக்குப் பார்வைக்காக அவரைப் பாராட்டி வருகின்றனர். "விவேக் டிரம்பின் தலைமை வியூகவாதியாக இருக்க வேண்டும்" என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், "நான் எப்போதும் விவேகை ஆதரித்தேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்" என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

பைடன் டிரம்ப்

"விவேக் ராமசாமியை மக்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அந்த மனிதர் அறிவு மற்றும் ஆர்வத்தின் செல்வம். அவர் ஒரு நாள் ஜனாதிபதியாக இருப்பார்" "எனக்கு அவரைப் பிடிக்கும், அவர் அமைச்சரவை பதவியை எடுத்து நம் நாட்டில் உள்ள அனைத்து தவறுகளையும் சரிசெய்ய உதவுவார் என்று நம்புகிறேன். அவர் புத்திசாலி மற்றும் "எங்களுக்கு அவர் தேவை" என்று மற்றொரு பயனர் கூறியிருக்கிறார். வைரலாகி வரும் அந்த வீடியோவில் எலான் மஸ்க் கருத்துத் தெரிவித்துள்ளார். "ஆம், அவரது கணிப்புகள் அனைத்தும் உண்மையாகிவிட்டன" என்று பதிவிட்டுள்ளார். 

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!