ஜாலி டூர்... கார் ஓட்டிய பள்ளி மாணவன்... தடுப்பு சுவரில் மோதி விபத்து... சம்பவ இடத்திலேயே பலியான நண்பன்!

 
கார்

தனது நண்பர்களுடன் ஏலகிரிக்கு ஜாலி டூர் சென்ற போது, பள்ளி மாணவன் ஓட்டி வந்த கார், தாறுமாறாக ஓடி மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பரிதாபமாக ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, சுற்றுலா தலமான ஏலகிரி மலைக்கு ஜாலி டூர் செல்ல முடிவு செய்து,  சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால், ஆம்பூர் நூருல்லா பேட்டை மற்றும் ஜலால் பேட்டையைச் சேர்ந்த 5 மாணவர்கள் காரில் சென்றுள்ளனர். இதில் 4 பேர் 10ம் வகுப்பும், 1 மாணவன் 11ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

கார் விபத்து

இதில் 11ம் வகுப்பு மாணவன் காரை ஓட்டிச் சென்றுள்ளார். சனிக்கிழமை முழுவதும் ஏலகிரியைச் சுற்றிப் பார்த்த அவர்கள் நேற்று ஊர் திரும்பினர். அப்போது, கார் வாணியம்பாடி அடுத்த வளையம்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் மீது வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால், சாலையில் தாறுமாறாக ஓடிய கார் மேம்பாலம் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த 10ம் வகுப்பு மாணவன் அதனான் என்பவர் சம்பவ இடத்தில் பலியானார். படுகாயம் அடைந்த ராஷித்(17), ஈஹான்(16), தக்வீம்(16),தல்ஹா(16) ஆகிய 4 மாணவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாணியம்பாடி காவல் நிலையம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாணியம்பாடி நகர போலீஸார் விபத்தில் பலியான மாணவன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தால் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web