பெண் பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் தந்தை காலமானார்...!!

 
சௌமியா

2008ம் ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி சௌமியா விஸ்வநாதன்  என்ற பெண் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். தெற்கு டெல்லியில் உள்ள வசந்த் குஞ்ச் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்று 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது.   சௌமியா விஸ்வநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக் மற்றும் அஜய் குமார்  4 பேரும்  குற்றவாளிகள் என  தீர்ப்பளிக்கப்பட்டது.

சௌமியா

இதில் 5 வது நபரான அஜய் சேத்தி, திருடப்பட்ட காரை வைத்திருந்ததற்காக அவரையும் குற்றவாளி என தீர்ப்பளித்தது.  இதையடுத்து, ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக் மற்றும் அஜய் குமார்  4 பேருக்கும்   ஆயுள் தண்டனையும், அவர்களுக்கு உதவிய அஜய் சேத்திக்கு  3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.   இந்த வழக்கில் சௌமியாவின் பெற்றோர் தலைநகர் டெல்லியிலேயே தங்கியிருந்து சட்டப்போராட்டம் நடத்தினர்.  

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

இந்நிலையில், 82 வயதான சவுமியாவின் தந்தை விஸ்வநாதன் நேற்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சௌமியா உயிரோடிருந்தால்  அவருக்கு நேற்று முன் தினம்  41 வது பிறந்தநாளாக இருந்திருக்கும் என்கின்றனர் உறவினர்கள். மகளுடைய பிறந்தநாளுக்கு  ஒரு நாள் கழித்து அவரது தந்தை உயிரிழந்து இருப்பது சக நண்பர்கள், உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web