பிக்பாஸ் அலப்பறைகள் ... யாருமே என்னை ஊக்குவிக்கலை.. கதறி அழுத ஜோவிகா!!

பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் 1 முதல் தொடங்கியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டாப் டிரெண்டிங்கில் இருக்கும் சீரியல் நேரம் பிக்பாசுக்காக மாற்றப்பட்டுள்ளது. தமிழின் 7வது சீசனில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் வகையில் ‘Know Your Housemates' என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டியாளர்கள் தாங்கள் எந்த அளவுக்கு பிரபலம் என்பதையும் விவாதிக்க வேண்டும். இந்த டாஸ்க் தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவணன் மற்றும் ஜோவிகாவுக்கு இடையில் நடந்து வருகிறது.
Jovika is happy to finally realize her abilities and to start winning in life.#BiggBossTamil7 pic.twitter.com/vGYIZEtnfL
— Bigg Boss Follower (@BBFollower7) October 4, 2023
ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த போதே கேட்கப்பட்ட கேள்வியில் தனக்கு படிப்பில் நாட்டம் இல்லை, நடிப்பில் தனக்கு ஆர்வம் இருப்பதால் தன் அம்மா இதனை ஊக்குவித்து வருகிறார் எனவும் சொல்லி இருந்தார். மேலும், தான் படித்த பள்ளியில் படிப்பைத் தவிர மற்ற விஷயங்களுக்கு பெரிதாக ஊக்கம் தரவில்லை எனவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டார். தற்போது நடக்கும் இந்த டிபேட்டில் ஜோவிகா , ”நான் ஒரு விஷயத்தை சொல்ல விருப்பப்படுகிறேன். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2 நாட்களில் எனக்கு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், ஏற்கனவே என் பள்ளி அனுபவங்களை சொல்லி இருக்கிறேன்.
நான் சில டிபேட்களில் கலந்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறேன்.யாரும் அதனை ஊக்குவிக்கவில்லை. இப்போது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததால், அந்த திறமையே எனக்கு இருக்கிறது என இப்போதுதான் அறிந்து கொள்ள முடிகிறது ” என அழுது கொண்டே கூறினார். ஜோவிகாவின் இந்த நெகிழ்ச்சியான பேச்சு அங்கிருக்கும் சக போட்டியாளர்களை கவர்ந்துள்ளது. அத்துடன் அவரை உற்சாகப்படுத்த தங்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜோவிகா அவர் அம்மாவை போல சண்டை போடாமல் இயல்பாக இருக்கிறார் எனவும் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...