சாதனைகளை மட்டும் பேசுங்க... கட்சியினருக்கு திமுக தலைமை அதிரடி உத்தரவு!
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தவெக தலைவர் விஜய் ‘மக்கள் சந்திப்பு பயணம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் திமுக அரசை நேரடியாக விமர்சித்து உரையாற்றி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், திமுக நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ கூட்டங்களில் விஜய் மற்றும் அவரது கட்சியை விமர்சித்து பேச திமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், விஜய்யின் பெயரை தவிர்த்து, கட்சியின் சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை மட்டுமே பேச வேண்டும் என மேலிடத்து உத்தரவு வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சியை குறிவைத்து பேச்சுகள் பிரச்சாரத்தில் கொடுத்து அவருக்கு தேவையற்ற முக்கியத்துவம் கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தான் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை, தமிழக அரசியலில் புதிய விவாதத்தையும், எதிர்க்கட்சிகளிடையே புதிய விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
