ஜோதிகா மகள் தியா இயக்குனராக அறிமுகம்!
தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக திகழ்ந்து வருபவர் சூர்யா ஜோதிகா தம்பதியினர். இவர்களுக்கு தியா என்ற மகள், தேவ் என்ற மகன் இருக்கின்றனர். தற்போது ‘தியா சூர்யா’ என்ற பெயரில் தியா இயக்கும் படத்துக்கு ‘லீடிங் லைட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதை சூர்யா, ஜோதிகாவுக்கு சொந்தமான 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து ஒளி வழங்கும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட்டில் பணிபுரிந்து வருகின்றனர். அப்பெண்களின் அனுபவங்களை பற்றியும் விவரிக்கும் டாக்குமெண்ட்ரி டிராமாவாக படம் உருவாகியுள்ளது.

உலகம் முழுவதும் பாராட்டுகளை குவித்து வரும் இந்தப்படம், ஆஸ்கர் குவாலிபையிங் ரன்னுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் ரீஜென்சி தியேட்டரில் திரையிடப்படுகிறது. செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை தினமும் பிற்பகல் 12 மணி காட்சியாக இப்படம் திரையிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
