தாயின் தங்கத்தை திருடி காதலிக்கு ஐபோன் பரிசு கொடுத்த பள்ளி மாணவன்... அதிர்ச்சி வாக்குமூலம்!
இந்தியா முழுவதும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பள்ளியில் மாணவ மாணவிகளின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளன. இதனை கண்டித்தால் அவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றனர். இதனால்பல நேரங்களில் அவர்கள் விபரீதமான முடிவுகளுக்கு சென்று விடுகின்றனர். அந்த வகையில் இருப்பதாகவும், முற்றிலும் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நஜாஃப்கர் பகுதியில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு சிறுவன் தனது தாயின் தங்கத்தை திருடி விற்று, அதில் கிடைத்த பணத்தில் தனது காதலிக்கு ஆப்பிள் ஐபோன் வாங்கி கொடுத்துள்ளான். அவளது பிறந்தநாள் விழாவிற்கும் பணம் செலவு செய்துள்ளான்.

சிறுவனின் தாய் தனது வீட்டில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் கொடுத்த பட்டியலில் இரண்டு தங்கச் சங்கிலிகள், ஒரு ஜோடி தங்க காதணிகள் மற்றும் ஒரு தங்க மோதிரம் காணவில்லை எனக் கூறியிருந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், இந்த நகைகளை 2 தங்க நகைக் கடைகளில் மாணவன் விற்றது தெரியவந்தது. அந்த நகைக் கடைகளில் ஒருவரான கமல் வேர்மா கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறார். தொடக்கத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் வீட்டின் உள்ளேயோ வெளியேயோ யாரும் வந்ததற்கான தடயங்கள் எதுவும் காணப்படவில்லை. இதனால், வீட்டில் உள்ளவர்களே திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, திருட்டு நடந்த நாளிலிருந்து சிறுவன் காணாமல் போனதும் தெரியவந்தது.
சிறுவனின் நண்பர்களிடம் விசாரணை நடத்தியதில் அவன் அந்த காலகட்டத்தில் ரூ 50,000 க்கு ஒரு புதிய ஐபோன் வாங்கியிருந்தான். போலீசார் பல இடங்களில் சிறுவனை தேடி கண்டுபிடித்து அவனை கைது செய்தனர்.சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் 9ம் வகுப்பு படிப்பதாகவும், தந்தை இறந்துவிட்டதாகவும், படிப்பில் விருப்பம் இல்லாமல் இருந்ததாகவும் தெரிவித்தான். அவனுக்கு அவன் படிக்கும் வகுப்பிலேயே ஒரு பெண் காதலி இருந்ததையும் ஒப்புக் கொள்கிறான். அவளை மகிழ்ச்சிப்படுத்தவே இந்த செயலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
