ககன்யான் திட்டம்... கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி!

 
ககன்யான்

இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜினிக் எஞ்சின் வடிவமைப்பில் இறுதி சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. உந்து சக்தி மற்றும் செயல்திறன்  ஆகியவை  வெற்றிகரமாக சோதனையிடப்பட்டதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் கனவுத் திட்டம் ககன்யான் திட்டம் இத்திட்டத்தின் படி மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதே. இத்திட்டத்தின் சோதனை ஓட்டம்  அக்டோபர்  21ம் தேதி நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அக்டோபர் 21ம்  தேதி காலை 7 மணி முதல் 9 மணிக்குள் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ   அறிவிப்பை இஸ்ரோ தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நிலவுக்கு சந்திராயனையும், சூரியனுக்கு ஆதித்யாவையும் அனுப்பி இந்தியா சாதனை படைத்துள்ளது தற்போது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில்  3 வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர்.

ககன்யான் விண்வெளி மனிதர்கள்

அவர்களை பூமியில் இருந்து 400 கி.மீ தொலைவில் பூமியின் சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டு, தொடர்ந்து 3  நாட்கள் விண்வெளியில் ஆய்வு செய்வர். இந்த ஆய்வுக்கு பின்  வங்காள விரிகுடா அல்லது அரபிக்கடலில் தரையிறங்கி பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டு வருவர்.   இத்திட்டத்தில் மனித பாதுகாப்பு மிக மிக முக்கியம். இதனை உறுதி செய்ய   பொறியியல் அமைப்புகள் மற்றும் மனித மைய அமைப்புகளை உள்ளடக்கிய பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டம்   எல்விஎம்3 – எச்எல்விஎம்3 (LVM3 – HLVM3) ராக்கெட் மூலம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது  எல்விஎம்3 ராக்கெட் திட நிலை, திரவ நிலை மற்றும் கிரையோஜெனிக் என 3 நிலைகளில் செயல்பட உள்ளது.  

இத்திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும்   வீரர்கள் பெங்களூருவில் உள்ள விண்வெளி வீரர் பயிற்சி நிலையத்தில் உடல் தகுதி பயிற்சி, சிமுலேட்டர் பயிற்சி மற்றும் ககன்யான் திட்டம் சார்ந்த பயிற்சி பெற்று வருகின்றனர். ககன்யான் திட்ட என்ஜின் சோதனையும் சமீபத்தில் நடைபெற்றது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் ககன்யான் திட்டத்தில் இன்ஜின் சோதனையும் வெற்றி பெற்றது.

ககன்யான் விண்வெளி மனிதர்கள்
இத்திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள இன்ஜின்களின் சோதனை, தமிழகத்தின் மகேந்திரகிரியில் உள்ள ஆய்வு மையத்தில் நடைபெற்று  வருகிறது. இந்நிலையில், ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம்  அக்டோபர் 21ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web