பழனி முருகன் கோவிலில் கெட்டு போன பிரசாதங்கள் விநியோகம்.. ஷாக் ஆன பக்தர்கள்..!

 
பழனி முருகன் கோவில்

பழனி முருகன் கோவிலில் நிர்வாகம் சார்பில், பஞ்சாமிர்தம், லட்டு, அதிரசம், முறுக்கு போன்றவை தயார் செய்யப்பட்டு, கோவில் பணியாளர்கள் மூலம் ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தைப்பூசத் திருவிழாவையொட்டி தயாரிக்கப்பட்ட பிரசாதங்கள் அனைத்தும் இன்று வரை விற்பனை செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளது, இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் இரவு பகலாக விற்பனை செய்து வருகின்றனர்.

26ம் தேதி தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தங்களை 15 நாட்களுக்குள் விற்பனை செய்ய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், லட்டு, முறுக்கு, அதிரசம் போன்ற பிரசாதங்கள் தயாரிக்கப்பட்ட தேதியின்றி விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அழுகி துர்நாற்றம் வீசுவதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டினார். இதனால் பிராசாத விற்பனையாளர்கள் வாங்கிய பணத்தை பக்தர்களிடம் திருப்பி கொடுத்தனர்.

இதையடுத்து, இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் கலைவாணி தலைமையில் ஏழு அதிகாரிகள், பஞ்சாமிர்தம் தயாரிக்கும் கடைகளில், கெட்டுப்போன பிரசாதம் விற்கப்படும் கடைகளில் ஆய்வு செய்தனர். உள்ளே சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள், பேக்கிங் கவர்களை மாற்ற வேண்டும் என்றும், எண்ணெயை நன்கு வடிகட்டி பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். காலாவதி தேதியை பதிவு செய்து பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web