கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடைக்குள் சிக்கிய ஊழியர்கள், பொதுமக்கள்... ஷட்டர் லாக் ஆனதால் பரபரப்பு!
Sep 18, 2024, 13:38 IST
தூத்துக்குடியில் பிரபல கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் ஷட்டர் லாக் ஆனதால் கடைக்குள் பொதுமக்களும், ஊழியர்களும் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வந்து பொதுமக்களை மீட்டனர்.
தூத்துக்குடி டபிள்யூ.ஜி.சி., ரோட்டில் உள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடையில் நேற்றிரவு ஹைட்ராலிக் க்ளோசர் கட்டாகி ஷட்டர் மூடிக் கொண்டது. இதனால் கடைக்குள் இருந்த பொதுமக்களும், கடை ஊழியர்களும் வெளியே வர முடியாமல் கடைக்குள்ளேயே சிக்கித் தவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட உதவி மாவட்ட அலுவலர் இ.ராஜூ தலைமையில் தூத்துக்குடி நிலைய சிறப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து த.முருகையா தலைமையில் பணியாளர்கள் விரைந்து வந்து ஷட்டரை உடைத்து அதில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
