அட்லி இயக்கத்தில் சல்மான்கானுடன் இணையும் கமல்?... விரைவில் அறிவிப்பு!

 
கமல் , சல்மான் கான்


 தமிழ் திரையுலகில் ”ராஜா ராணி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி,  தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து  வெற்றிப்படங்களை கொடுத்தார் இயக்குனர் அட்லீ. இவரது இயக்கத்தில் வெளியான ‘ஜவான்’ ஹிந்தி திரைப்படம் பாலிவுட் திரையுலகில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.  இந்தப் படம் இந்திய திரையுலகில் மாபெரும் வெற்றியை பெற்று 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.  

கமல் சல்மான்

அதைத்தொடர்ந்து, அட்லீ மீண்டும் ஹிந்தியில் ஒரு படம் பண்ணப் போவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இயக்குநர்  அட்லீ தற்போது சல்மான் கான் உடன் ஒரு படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்க்ஷன் பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நயன் ஷாருக் அட்லி


தற்போது இந்தப் படம் டபுள் ஹீரோ கதைக்களம் என்பதால், சல்மான் கான் உடன் வேறு ஒரு முக்கிய நடிகர் மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு கூடி விவாதம் நடத்தியது. இந்த விவாதத்தின் முடிவில்  படக்குழு கமல்ஹாசனை அணுகியுள்ளது. கமல் ஓகே சொன்னதாகவும்,  கூடிய விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web