காமராஜர் வழியில் தொடர சபதம் ஏற்போம் ... காந்தியத்தின் கடைசி தூண் சரிந்த தினம்!!

 
காலம் போற்றும் கர்மவீரர் ! சாதனைத் தமிழர் காமராஜர்!

தமிழகத்தின் கல்விக்கண்ணை திறந்த காமராஜர் 1975ம் ஆண்டில் இதே நாளில் தான் உயிர் நீத்தார். காலங்கள் கடந்தாலும் காமராஜர் ஆட்சியை போல் தமிழகத்தில் மீண்டும் ஓர் பொற்காலம் என்று தான் இன்றைய அரசியல்வாதிகளும் பிரச்சார மேடையில் முழங்குகின்றனர். காமராஜர் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக அவர் பங்களிப்பையும் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெரும் பாடமாக அமைந்துள்ளது.

காலம் போற்றும் கர்மவீரர் ! சாதனைத் தமிழர் காமராஜர்!

1903, ஜூலை 15ம் தேதி விருதுநகரில் பிறந்தார். இவர் பள்ளிக்கு சென்ற காலத்திலேயே ‘வந்தே மாதரம்’ கோஷத்தினால் ஈர்க்கப்பட்டவர். இதனாலேயே இந்திய விடுதலைப்போராட்டத்தில் தீவிரமாக இறங்கினார். காமராஜர் முதல்வராக பொறுப்பேற்றதும் கல்விக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தார்.
கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த காலத்தில் பாமரர் வீட்டுக் குழந்தைகளும் பள்ளிக்கூடத்துக்கு சென்று படிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர்.

காமராஜரின் விதைகள் தான் இன்று முளைத்து, வேர்விட்டு தழைத்து மிகப்பெரும் விருட்சங்களாக உருவாகி தமிழகத்தை கல்வியில் தலைசிறந்த இடமாக உயர்த்தியுள்ளது.காமராஜரின் மதிய உணவு திட்டம் தான் அன்றைய தமிழகத்தின் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்தது என்றால் மிகையில்லை.தமிழகத்தில் கீழ்பவானித்திட்டம், மணிமுத்தாறு திட்டம், மலம்புழாத்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவிரி கழிமுக வடிகால் திட்டம் என பல நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

காலம் போற்றும் கர்மவீரர் ! சாதனைத் தமிழர் காமராஜர்!

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அன்றே கொண்டு வந்து பெரும் புரட்சியை உருவாக்கியவர்.தமிழகத்தில் மின்உற்பத்தி திட்டங்களையும் கொண்டு வந்தவர். தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா என கட்சி பாகுபாடின்றி அனைவரின் அன்பையும் பெற்றவர் காமராஜர். காந்திய வழியில் நின்று சத்தியத்திற்காக உழைத்தார். அவரின் உடல் மறைந்தாலும் உணர்வுகளால் தான் தமிழகம் இன்னும் இன்னும் விரிந்து கொண்டே தான் செல்கிறது. அவரின் வழியில் பயணத்தை தொடருவோம் என்பது தான் தமிழகம் தற்போது எடுத்துக்கொள்ளவேண்டிய சபதம் என்றால் மிகையில்லை.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web