காமராஜர் நினைவலைகள்... கல்விக் கண் திறந்த கர்மவீரரின் கடைசி நிமிடங்கள்!!

 
காலம் போற்றும் கர்மவீரர் ! சாதனைத் தமிழர் காமராஜர்!

இந்த பூமியில் எத்தனையோ மனிதர்கள் வாழ்ந்து மறைகிறார்கள் ஆனாலும் ஒரு சிலர் தான் சரித்திரத்தை படைக்கின்றனர். மறைவிற்கு பிறகும் அவர்களது உணர்வுகளால் வாழ்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் தமிழகத்தின் பெரும் பேறாக இம்மண்ணில் வாழ்ந்தவர் கர்மவீரர் காமராஜர். இப்போதைய தலைமுறை இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்ற வியப்பில் ஆழ்கிறது.

காலம் போற்றும் கர்மவீரர் ! சாதனைத் தமிழர் காமராஜர்!


அரசியலில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்விலும் இலக்கணமாக வாழ்ந்து மறைந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் இறுதி நாள்:
1975,அக்டோபர் 2ம் தேதி வழக்கம் போல் காலை 06.30 க்கு எழுந்து காலைப் பத்திரிக்கைகள் முழுவதையும் படித்து முடித்து குளித்து சிற்றுண்டி சாப்பிட்டார்.
காலை 10 மணிக்கு காமராஜருக்கு வழக்கமான செக் அப் மருத்துவர் வந்து இன்சுலின் செலுத்தி விட்டு சென்றார்.


காலை 11 மணிக்கு சட்டக்கல்லூரி மாணவர்களை சந்தித்தார். மாணவர்கள் காந்தி வாழ்க, காமராஜர் வாழ்க என்று கோஷமிட்டனர். சில நிமிடங்கள் உரையாடிய காமராஜர் அவர்களிடம் விடைபெற்று சென்றார்.
பகல் 12 மணிக்கு காங்கிரஸ் செயலாளர்களை வரும்படி போனில் அழைப்பு விடுத்தார். பின்னர் சிதம்பரம் நகர காங்கிரஸ் இணைச்செயலாளர் தணிக்கை தம்பி காமராஜரை சந்தித்தார்.

 


மதியம் 01.30க்கு பாவக்காய் கறி, முளைக்கீரை மசியல், பருப்பு துவையல், மோர் சாதம் இவற்றை உதவியாளர் வைரவன் பரிமாற சாப்பிட்டார்.
மின் விசிறி ஓடிக்கொண்டிருந்த போதும் உணவு அருந்தும் போது காமராஜருக்கு வியர்த்தது. சாப்பிட்டு முடித்த பிறகு பாத்ரூம் சென்று விட்டு படுக்கை அறைக்கு சென்றார். மணியடித்தால் தான் உதவியாளர் உள்ளே வரவேண்டும் என்பது வழக்கமாக இருந்தது.

காந்தியத்தின் கடைசித் தூண்! காமராஜரின் கடைசி நிமிடங்கள்!

இரண்டு மணிக்கே உதவியாளரை மணியடித்து அழைத்தார். வைரவன் உள்ளே சென்று பார்க்கும் போது ஏசி அறையிலும் காமராஜருக்கு உடம்பெல்லாம் வியர்த்து கொட்டியது. காமராஜரின் தலை அப்போதே சில்லிட்டு போயிருந்தது.வழக்கமான டாக்டர் செளரிராஜனுக்கு போன் செய்ய அவர் கிடைக்கவில்லை . உடனடியாக அருகில் இருந்த மருத்துவர் ஜெயராமனிடம் பேசினார். மூச்சு திணறுகிறதா, மார்பில் வலியிருக்கிறதா என சராமாரியாக கேள்விகளை கேட்ட மருத்துவர் உடனே புறப்பட்டு வருவதாக கூறினார்.


மீண்டும் உதவியாளரை அழைத்த காமராஜர் வரும்போது ரத்த அழுத்தம் பார்க்கிற கருவியை எடுத்து வரச் சொல்லு, டாக்டர் வந்த பிறகு எழுப்பிவிடு, விளக்கை அணைத்து விட்டு போ எனக் கூறினார். உதவியாளரும் விளக்கை அணைத்து விட்டு மருத்துவரின் வரவுக்காக காத்திருந்தார்.3 மணிக்கு டாக்டர் செளரிராஜனும், ஜெயராமனும் வந்து சேர்ந்தனர். காமராஜர் வழக்கம் போலவே கட்டிலின் இடதுபுறம் திரும்பி இரண்டு கைகளையும் தலைக்கு முட்டுக் கொடுத்து கால்களை மடக்கி படுத்திருந்தார்.


டாக்டர் சௌரிராஜன் தோளைத் தொட்டு எழுப்பினார். நாடித்துடிப்பை பார்க்கலாம் என கையைத் தொட்ட போது கை ஜில்லென்று இருந்தது. கையில் இருந்த ரத்த அழுத்தக் கருவியையும், ஸ்டெதஸ்கோப்பையும் தரையில் அடித்து, அழுது புரண்டார்.டாக்டர் ஜெயராமன் நேரிடையாக இதயத்திற்குள் ஊசி மருந்தை செலுத்த முயற்சி செய்தும் பலனில்லை.வெளியில் வந்து அதிகாரப்பூர்வமாக காமராஜர் உயிரிழந்ததை அறிவித்தனர். அப்போது மணி 03.20. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வேரூன்றி இருந்த நம்பிக்கை சாய்ந்தது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web