வாழ்வில் ஒருமுறை மட்டுமே அமையும் படம் காந்தா... துல்கர் நெகிழ்ச்சி !
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “காந்தா” வெளியாகவுள்ளது. மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படம், நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இதற்கான டிரைலர் இன்று வெளியிடப்பட்டது.

டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய துல்கர் சல்மான், “காந்தா திரைப்படம் இதில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் ஒரு வாய்ப்பு. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறோம் என நினைக்கிறேன்,” என்று கூறினார். மேலும், “எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும். நம் சினிமா கோடம்பாக்கத்திலிருந்துதான் மற்ற மாநிலங்களுக்கு பரவியது. அந்தக் கால சினிமா ஸ்டூடியோ கலாசாரம் மற்றும் அதன் கதைகளை இப்படம் அழகாக பதிவு செய்கிறது. அதை நீங்கள் கண்டிப்பாக ரசிப்பீர்கள்,” என்றார்.

வரலாற்று நாயகனின் வாழ்க்கையை சினிமா வழியாக வெளிக்கொணரும் முயற்சியாக “காந்தா” திரைப்படம் அமைந்துள்ளதால், அதன் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
