கார்த்தி சிதம்பரத்திற்கு அறுவை சிகிச்சை... சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்திற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் தற்போது உடல்நலம் தேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த அக்டோபர் 7ம் தேதி காலை அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர் சந்தோஷ் ஆனந்த் தலைமையிலான மருத்துவ குழுவினர் கார்த்தி சிதம்பரத்திற்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
