புதிய விசாரணை அதிகாரி நியமனம்... கரூர் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு ...!
கரூர் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, இன்று செப்டம்பர் 29ம் தேதி காலை முதல் ஏடிஎஸ்பி பிரேமானந்தன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.தவெக தலைவர் விஜய், கரூரில் சனிக்கிழமை இரவு மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனா். 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் 2வது நாளாக கரூரில் இன்று செப்டம்பர் 29ம் தேதி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. கூட்ட நெரிசல் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவமனை, பலியானவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
