கரூர் கூட்ட நெரிசல் வழக்கு... உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு!
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் பலியானது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, அரசியல் கட்சிகள் நடத்தும் ‘ரோடு ஷோ’களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என தினேஷ் என்ற நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கில், கரூர் நெரிசல் விபத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள் மற்றும் பா.ஜ.க. வக்கீல் ஜி.எஸ். மணியும் சி.பி.ஐ. விசாரணை கோரி தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த அனைத்து மனுக்களும் ஒரே நேரத்தில் விசாரிக்கப்பட்டபோது, தமிழக அரசு மற்றும் விஜய் தரப்பில் விரிவான வாதங்கள் நடைபெற்றன. இருதரப்பினரின் வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு, தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தது. இப்போது, அந்த தீர்ப்பு நாளை (திங்கட்கிழமை) அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
