கரூர் துயரம்... தவெக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி!
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு குறித்த வழக்கில், தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கடந்த 29ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் தவெக நிர்வாகியின் மதியழகனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து கரூர் டவுன் போலீசார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (வயது 49), பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் மற்றும் சிலர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கிராமத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மதியழகனை தனிப்படை போலீசார் கடந்த 29ம் தேதி கைது செய்தனர். மேலும் மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்திற்காக தவெக கரூர் நகர பொறுப்பாளர் மாசி என்கிற பவுன்ராஜையும் போலீசார் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து கடந்த 30ம் தேதி 2 பேரும் கரூர் குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பவுன்ராஜ் சார்பில் கடந்த 6ம் தேதி கரூர் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மாவட்ட அமர்வு நீதிபதி இளவழகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணை தற்போது தான் தொடங்கி இருப்பதாலும், வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதாலும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
