கரூர் துயரம்... மருத்துவமனையில் இருந்து அனைவரும் வீடு திரும்பினர்!
கரூரில் நடிகர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், 110 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் வீடு திரும்பினர்.

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 110 பேரில், 51 பேர் குணமடைந்து அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 59 பேரில், 51 பேர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 8 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனையில் உள்ள 59 பேருக்கும் உயர்சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்நிலையில், கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் (59 பேரும்), குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திருச்சியில் 2 பேர், மதுரையில் 2 பேர் என மொத்தம் 4 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேரும் விரைவில் குணமடைய உயரிய சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
