கரூர் துயரம்... தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு!
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் நாளை உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படுவதாக தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வணிகர் சங்கங்களின் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் பிரசாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை செப்டம்பர் 29ம் தேதி மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.

நாளை மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்படும் எனவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மருந்துக் கடைகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும்” என கூறப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
