இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபடும் முதல் மாநிலமாகிறது கேரளா... விழாவில் கமல், மோகன்லால், மம்முட்டி பங்கேற்பு!
கேரளா வறுமை இல்லாத முதல் மாநிலமாக மாறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னேற்றத்தை மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வருகிற நவம்பர் 1ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.
கேரளாவில் வறுமையை அகற்றும் நோக்கில் 2021-ஆம் ஆண்டு மாநில அரசு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, 64,006 குடும்பங்கள் மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்தது என கணக்கிடப்பட்டது. இவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சுமார் 4,000 பேருக்கு புதிய வீடுகள் கட்டி வழங்கப்பட்டன.
1,300 பேருக்கு நிலம் வழங்கப்பட்டது.
5,700 பேரின் வீடுகளை புதுப்பிக்க தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
104,000 பேருக்கு அடிப்படை வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் மூலம் வறுமையில் இருந்த 64,006 குடும்பங்களும் தற்போதைய நிலையில் ஓரளவு நலவாழ்வை அடைந்துள்ளனர்.
மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது, “இந்த முன்னேற்றம் கேரளா அரசின் சமூக நல திட்டங்களில் மிக முக்கியமான சாதனையாகும். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகள் தொடரும்” என்கிறார்.இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வர் என தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
