கேரளா தேவஸ்தானம் தங்கக் கவசச் சர்ச்சை... 400 கிராம் தங்கம் பறிமுதல்!

 
சபரிமலை

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா 1998 ஆம் ஆண்டு கேரளா தேவஸ்தானத்திற்கு 30 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கியிருந்தார். அந்த தங்கம் பின்னர் தங்கக் கவசமாக மாற்றப்பட்டு, தேவஸ்தானத்திற்கு திரும்ப அளிக்கப்பட்டது. இதை செப்பனிடும் பணிக்காக பெங்களூரு நபர் உன்னி கிருஷ்ணன் போத்தி தொடர்புடைய நகைக்கடைக்கு கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன்

சமீபத்தில், கேரளா உயர் நீதிமன்றத்தில் சபரிமலை கோவில் சிறப்பு ஆணையர் தங்கக் கவசம் அனுமதி இல்லாமல் செப்பணியிடப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைத்தார். அதன்படி கூடுதல் டிஜிபி வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைந்து விசாரணை நடத்தியது. அதன் பேரில் சென்னையில் உள்ள அம்பத்தூர் நிறுவனத்தில் சுமார் 12 மணி நேர விசாரணை நடைபெற்றது.

சபரிமலை விஷூ கனி ஐயப்பன்

இதனிடையே, கர்நாடகாவில் முகாமிட்டு விசாரணை நடத்திய சிறப்பு குழுவினர், பெல்லாரி பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் கோவர்தனனின் வீட்டில் சோதனை நடத்தி 400 கிராம் தங்கம் மற்றும் பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கோவர்தனன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “எனது வீட்டிலிருந்து தங்க நகைகள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. ஆவணங்களை மட்டுமே அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!