இந்தியாவிலேயே வறுமையிலிருந்து விடுபட்ட முதல் மாநிலம் கேரளா ... முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்!
கேரளா மாநில நிறுவனர் தினத்தை முன்னிட்டு சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டார். அப்போது அவர், “இந்தியா முழுவதும் வறுமையிலிருந்து முழுமையாக விடுபட்ட முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: “நூறு ஆண்டுகளுக்கு முன்பு மொழிவாரி மாநிலங்களை உருவாக்கும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சுதந்திரத்திற்குப் பின்னர் நடந்த நீண்ட போராட்டங்களின் மூலம் ஒருங்கிணைந்த கேரளா உருவாகியது. அதுவே மலையாள மக்களின் கனவாகவும் இருந்தது. இன்று அந்த ஒருங்கிணைந்த கேரளா உருவாகி 69 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது” என்றார்.
1961–62 ஆம் ஆண்டில் கேரளாவில் கிராமப்புறங்களில் 90.75% மக்கள், நகர்ப்புறங்களில் 88.89% மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தனர். ஆனால் தற்போது அந்த நிலைமை முற்றிலும் மாறி விட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி முதல்வரின் இந்தக் கருத்தை ஏற்க மறுத்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
