கேஜிஎப் பட நடிகர் காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!
பிரபல கன்னட திரைப்படமான கேஜிஎப்–ல் நடித்த நடிகர் ஹரிஷ் ராய் இன்று (நவம்பர் 6) உயிரிழந்தார். அவர் கடந்த சில ஆண்டுகளாக தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கேஜிஎப் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. பின்னர் பெங்களூருவில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையில் நுரையீரல் அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சை பெற்று வந்தார்.

சமீபத்தில் ஹரிஷ் ராய், சிகிச்சை செலவு அதிகம் என்பதால் ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்களிடம் நிதி உதவி கேட்டிருந்தார். “ஒரு ஊசிக்கு மட்டும் ரூ.3 லட்சம் செலவாகிறது” என்று அவர் ஒரு காணொளியில் வெளிப்படையாக கூறியிருந்தார். நடிகர் கோபி கவுத்ரு அவரைச் சந்தித்து நிதி உதவி கோரி சமூக வலைதளங்களில் பதிவிட்டதும் அப்போது பரவலாக பேசப்பட்டது.
ஆனால், பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தபோதும் உடல்நிலை மோசமடைந்த ஹரிஷ் ராய் இன்று காலமானார். அவரின் மரணம் கன்னடத் திரையுலகில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கேஜிஎப் திரைப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களால் என்றும் நினைவுகூரப்படும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
