40 வயது பெண் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்... காய்கறி வாங்கச் சென்ற போது கொடூரம்...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சின்னஞ்சிறு வயது சிறுமி முதல் வயதான மூதாட்டி வரை இந்த பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது பெரும் கவலையை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 40 வயதில் ஒரு பெண் பேருந்து ஓட்டுனரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த பெண்ணின் கணவர், வியாழக்கிழமை பேருந்தில் சென்ற மனைவி திரும்பி வராததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் வியாழன் நள்ளிரவில் ஒரு பெண் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக போலீஸார் தகவல் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை காலை பாஜக தொண்டர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரா கைது செய்யப்பட்டார்.
இது குறித்து பாஜக வேட்பாளர் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து, மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ஆளும் காங்கிரஸ் அரசைக் குற்றம் சாட்டினார். காய்கறி வாங்குவதற்காக வெளியே சென்றிருந்த சமயத்தில் குற்றவாளிகளால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ற்றவாளியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல் கடந்த மாதம் ராஜஸ்தானின் தீத்வானா குச்சமன் மாவட்டத்தில் 32 வயது தலித் பெண் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே போல் ராஜஸ்தானின் தௌசாவில் நான்கு வயது சிறுமியை வீட்டிற்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் நவம்பர் 10ம் தேதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!