பெற்றோர்களே உஷார்.... கோவிலில் நைசாக பேசி ஒன்றரை வயது குழந்தை கடத்தல்..!!

 
குழந்தைகடத்தல்

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள்   முத்துராஜ், மதி தம்பதியர். இதில் முத்துராஜ் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ராஜேஸ்வரி, ராஜசேகர், ஸ்ரீஹரி என  3 குழந்தைகள்.    குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதற்காக  செப்டம்பர்   28ம் தேதி   குழந்தை ஸ்ரீஹரிசுடன் வந்து கோவில் வளாகத்தில் தங்கியிருந்தனர்.  

குழந்தை கடத்தல்


இந்நிலையில் தனது கணவருக்கு மனநிலை சரியில்லை, அதனால் கோவிலில் மாலை அணிந்து விரதம் இருப்பதாகக் கூறி 40 வயது பெண் ஒருவர் கோவில் வளாகத்தில் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.   திருச்செந்தூருக்கு துணி துவைப்பதற்காக போகிறோம் எனக் கூறியபோது அந்த பெண்மணியும் எனக்கும் துணி துவைக்க வேண்டி உள்ளது. நானும் வருகிறேன் என்று சொல்ல, முத்துராஜ், மதி மற்றும் அந்தப் பெண்  3 பேரும்  திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்து மதியம் சுமார் 12 மணிக்கு துணி துவைப்பதற்காக பாத்ரூமுக்குள் சென்றுள்ளனர். 

திருச்செந்தூர் முருகன்
 அந்த பெண்மணி நான் குழந்தையை வைத்துக் கொள்கிறேன் என சொல்லி குழந்தையை அப்பெண் வாங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து பார்த்தபோது குழந்தையுடன் அப்பெண் மாயமானார். நீண்ட நேரமாகியும் குழந்தை கிடைக்கவில்லை. உடனே   கோவில் வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து   புகார் அளிக்கப்பட்டது.  இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரலாம்.   அனைவரும் தங்களது குழந்தைகளையும், உடமைகளையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web