வட கொரியா VS தென் கொரியா.. போருக்கு ஆயத்தமாகும் கிம் ஜாங்-உன்.. வெளியான பகீர் தகவல்..!

 
கிம் ஜாங்-உன்

கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் வடகொரியா சோதனை செய்த ஏவுகணைகள் தென்கொரியா மற்றும் ஜப்பான் கடல் பகுதியில் விழுந்து அந்த நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, தென்கொரியாவுடன் கூட்டு ராணுவ பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால், தென் கொரியாவுடனான அனைத்து வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளையும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் துண்டித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சென்று அங்குள்ள ராணுவ தளபதிகள் மற்றும் ராணுவ வீரர்களை சந்தித்த கிம் ஜாங்-உன், தென்கொரியாவுக்கு எதிராக போர் தொடுக்க தயாராக இருக்குமாறு கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கோ, தூதரக உறவை தொடர்வதற்கோ விருப்பம் இல்லை என்றும், தென்கொரியா தொடர்ந்து ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டால், மொத்தமாக அழிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

North Korea tests more cruise missiles as leader Kim calls for war readiness

தென் கொரியாவுக்கு எதிராக எந்த நேரத்திலும் போர் தொடுப்பதற்கு ராணுவம் தனது அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவித்தார். ஏற்கனவே உக்ரைன்-ரஷ்யா, இஸ்ரேல்-ஹமாஸ் என பல பகுதிகளில் போர் நடந்து வரும் நிலையில், தற்போது வடகொரியா-தென்கொரியா போர் தொடங்குமோ என ஐ.நா போன்ற அமைப்புகள் கவலை கொண்டுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web