ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் கிருத்திகை விரதமுறை, வழிபாடு , பலன்கள்...!

 
முருகன்

கிருத்திகை விரதத்தை எப்படி கடைபிடிப்பது? சிவபெருமானின் அருளால் தோன்றி ஆறு கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டவர் முருகப்பெருமான். அந்த கார்த்திகை பெண்களை கௌரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் “கார்த்திகை” நட்சத்திரமாக மாறி அன்றைய தினத்தில் முருகப்பெருமானை வழிபடப்படும் வழக்கம் ஏற்பட்டது. அனைத்து கிருத்திகை நாட்களுமே முருகனுக்கு உகந்தவை 

முருகன்

 கிருத்திகை தினத்தில் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படும். முருக பக்தர்கள் காவடி சுமந்து, திருத்தணி மலை மீது ஏறி தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்துவது வழக்கம். இன்றைய தினம் முருகன் துதிப் பாடல்கள், கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் இவைகளை மனதில் பாராயணம் செய்யலாம். இந்த ஆடி கிருத்திகை தினத்தில்  அதிகாலை  குளித்து முடித்து விட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறுகோண கோலம் இட வேண்டும்.

விளக்கு

நெய் தீபமேற்றி, பூக்கள் மற்றும் பழங்களை நிவேதனம் வைத்து உணவு மற்றும் நீரேதும் அருந்தாமல் கந்த சஷ்டி கவசம் அல்லது சண்முக கவசத்தை பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள்  உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு மாலையில்  அருகில் உள்ள முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இதனால் தீராத கஷ்டங்கள் தீர்ந்து நல்வாழ்வு பெறலாம் என்பது ஐதீகம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை