அக்டோபர் 25, 26 தேதிகளில் கொங்கு தீபாவளி திருவிழா... நடிகை ஆண்ட்ரியா தொடங்கி வைப்பு!

 
ஆண்டிரியா

பல்லடம் கிளாசிக் சிட்டியில் அக்டோபர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் “கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025” நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் இசை, நகைச்சுவை, உணவு, கலாச்சாரம், ஷாப்பிங் என அனைத்தையும் ஒரே இடத்தில் அனுபவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொங்குநாட்டின் பாரம்பரியத்தையும் மக்களின் உற்சாகத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த விழா வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா ஜெரேமியா நேரடி இசை நிகழ்ச்சியுடன் கலந்துகொள்கிறார். மேலும் நகைச்சுவை கலைஞர் மதுரை முத்து தனது சிறப்பு நிகழ்ச்சியில் ரசிகர்களை கவர உள்ளார். இதனுடன் வண்ணமயமான சர்வதேச காத்தாடி விழா, பாரம்பரிய உணவுகளுடன் கூடிய உணவுப் பந்தல் மற்றும் கைவினைப் பொருட்கள், பிரபல பிராண்டுகளின் பொருட்கள் கொண்ட ஷாப்பிங் ஸ்டால்களும் நடைபெறவுள்ளன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறுகின்றன. இந்த திருவிழா, NV Lands நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறுகிறது. தீபாவளி கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில், மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் அனுபவிக்க ஒரு அரிய வாய்ப்பாக இந்த விழா அமையும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?