கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா.. ஆக.7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

 
சேலம் கோட்டை மாரியம்மன்

சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 7ம் தேதி கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு மாரியம்மன் கோவில்களில் பெரிய கோவிலாக அமைந்திருப்பது மாரியம்மன் கோவில். இதனாலேயே  இந்த கோவில் "கோட்டை பெரிய மாரியம்மன் கோவில்" என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வரப்படுகின்றது. சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் “எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி” என்ற சிறப்புப் பெயரும் இந்த கோவிலுக்கு உண்டு.

விடுமுறை

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்ய ஆகஸ்ட் 31ம் தேதி முழு பணி நாளாக இயங்கும் என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.

விடுமுறை

உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 7ம் தேதி சேலம் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!