வழிப்பறி, கொள்ளை கும்பலின் கூடாரமாகி வரும் கோயம்பேடு பேருந்துநிலையம்... !

 
கோயம்பேடு

 
சென்னையில் 24 மணி நேரமும் மிகவும் பரபரப்பாக இயங்கிகொண்டிருந்த  கோயம்பேடு பேருந்துநிலையம் இன்று  குடிகாரர்கள், வழிப்பறி கொள்ளையர்களின்  கூடாரமாகி வருகிறது என்கின்றனர் இங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சமீபத்தில் திறக்கப்பட்டது.

கோயம்பேடு

இங்கிருந்து தான் வெளியூர் வெளிமாநிலங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் பேருந்துகள், தென் மாவட்ட பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை! மக்களே தேவையான ஏற்பாட்டை செய்துக்கோங்க!
சுற்றுவட்டாரத்தில் உள்ள ரவுடி கும்பல், திருட்டு கேஸ், வழிப்பறி கும்பல், கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பதுங்கும் இடமாக மாறிவருகிறது. இங்குள்ள வியாபாரிகள் தான் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். கடை வைத்தவர்கள் யாருமே இல்லாத கடையில் டீ ஆற்றி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் இங்கு கடையை காலி செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீஸ் ரோந்தை இப்பகுதியில் தீவிரப்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web