நெகிழ்ச்சி வீடியோ... லவ் யூ ... மாசம் 50 பேருக்கு ப்ரோபோஸ் செய்யும் KPY பாலா!

 
பாலா

பிரபல தனியார் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில்  6வது சீசனில்  போட்டியாளராக  என்ட்ரி கொடுத்தவர் பாலா.  கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பிறகு  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் போட்டியாளராகவும் களமிறங்கினார்.  குக் வித் கோமாளி மூலம்  பெரும் புகழ் பெற்றார்.  சின்னத்திரையில் கிடைத்துவரும் அனைத்து வாய்ப்புகளையும் பாலா பயன்படுத்தி விடுவார். அத்துடன்  சினிமாவிலும் காமெடி நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.  புலிகுத்தி பாண்டி, நாய் சேகர் ரிட்டன்ஸ், காக்டெயில், தும்பா, ஜுங்கா உட்பட  பல படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  


சமீபகாலமாக பாலா  செய்துவரும் மக்கள் பணி பேசப்படுகிறது. தான் சம்பாதிக்கும் பணத்தில்  ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, முதியோர்களுக்கு வெண்டிலேட்டர் வசதியோடு ஆம்புலன்ஸ் என பல வகைகளில் உதவிகளை செய்து வருகிறார்.   குறிப்பாக மலைக்கிராமங்களில் மருத்துவ தேவைக்காக மக்கள் பயன்படுத்த இலவச ஆட்டோ வழங்குவது என  பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.  சென்னையில் வெள்ள பாதிப்பு சமயத்திலும் நெகிழ்ச்சியான பல விஷயங்களை செய்திருந்தார்.   அந்த வகையில்  காதலர் தின மாதத்தில்   Valentine மாதத்தில் யாருக்கும் காதல் ப்ரொபோஸ் செய்யவில்லையா ? என பலரும் அவரைக் கேட்டனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் அவர்  ஒருவருக்கு இல்லை 50 பேருக்கு ப்ரொபோஸ் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். ரூ1000  பணத்தோடு 50 பேருக்கு ஐ லவ் யூ என்று சொல்லவிருக்கிறார். இது இந்த மாதம் மட்டுமல்லாது மாதாமாதம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
 

பாலா
அந்த வகையில் முதல் மாதமான இந்த மாதம் பாலா செய்த இந்த விஷயத்தை வீடியோவாக எடுத்து அவரே பதிவிட்டுள்ளார்.   பாலா, ஐ லவ் யூ கூறிய நபர்கள் அனைவருமே சிரமப்படும் சூழ்நிலையில் இருப்பவர்கள். இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக கண்கலங்கும்.  பாலா பதிவிட்ட இந்த வீடியோவின் கமெண்ட்டில் பலரும் அவர்களது காதலை பாலாவிற்கு சொல்லியிருக்கிறார்கள். இந்த சேவைக்காக நாங்கள் உங்களை வாழ்த்துகிறோம்.. நீங்கள் மனிதரா அல்லது தெய்வப்பிறவியா ?.. மிகவும் பெருமையாக இருக்கிறது. ஐ லவ் யூ பாலா என ரசிகர்கள்  கமெண்ட்களை  பதிவிட்டுள்ளனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web