350 சிறப்பு பேருந்துகள்... குலசை தசரா திருவிழா கோலாகலம்!

 
குலசை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா  கோலாகலமாக  கொடியேற்றத்துடன் தொடங்கியது. அக்டோபர்  4ம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழா ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மருத்துவத்துறை அனைத்துதுறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, கள ஆய்வு மேற்கொண்டனர்.

குலசை தசரா திருவிழா | நவநீதகிருஷ்ணர் கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா!

 திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் போக்குவரத்து வசதிகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், தற்காலிக பஸ் நிறுத்தம், குடிநீர் வசதி, மருத்துவ வசதிகள் உட்பட  அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  குலசைக்கு வருகை தரும் வாகனங்களை பொறுத்தவரை  39 தற்காலிக வாகன நிறுத்துமிடங்களும், 3 முக்கிய சாலைகளில் தற்காலிக பஸ் நிறுத்தங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக 350 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும், 2 மற்றும் 3ம் தேதிகளில் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குலசை

அந்த நாட்களில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.  பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில், ஏராளான குடிநீர் தொட்டிகளும், சுகாதார வளாகங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவைகளை பராமரிக்க போதிய தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  சுகாதாரத்துறை சார்பாக 3 மருத்துவ குழுவினர் 24மணி நேரமும் பணியில் இருப்பர். இதுதவிர நடமாடும் மருத்துவ குழுவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?