குலசை தசரா திருவிழா.. சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா!

 
குலசை தசரா

தூத்துக்குடி மாவட்டம் குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவில் 6ம் திருவிழாவான நேற்று இரவு சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 6-ம் திருவிழாவான நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. வேடமணியும் தசாரா குழுவினர் காலை முதலே வரத்தொடங்கினர். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று காப்பு கட்டிக்கொண்டனர். 

குலசேகரப்பட்டினம் தசரா நடனம் நாட்டுப்புற

இரவில் சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 7-ம் திருவிழாவான இன்று (திங்கட்கிழமை) இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா நடைபெறும். 

அக். 2ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைக்குப் பின்னர், அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரா் கோயில் முன் எழுந்தருளி மகிஷாசுரனை சம்ஹாரம் செய்கிறர். தொடா்ந்து, கடற்கரை வளாகம்,சிதம்பரேஸ்வரா் கோயில் முன் அபிஷேக மேடை, கோயில் கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெறும்.

குலசை

அக். 3ஆம் தேதி காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா புறப்பட்டு, மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்ததும் காப்புக் களைதல் நடைபெறும். பக்தர்கள் வேடங்களைக் களைந்து விரதத்தை நிறைவு செய்வர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?