இன்றே கடைசி... பாஸ்ட் டேக் கார்டை அப்டேட் பண்ணுங்க... வாகன ஓட்டிகளே உஷார்..!

 
பாஸ்ட் டேக்

இந்தியா முழுவதும்   சுங்கச்சாவடி கட்டணங்கள்  பாஸ்ட் டேக் முறையில் வசூலிக்கப்பட்டு வருகின்றன.  இந்தியா முழுவதும்   98 சதவீதமான வாகனங்களில் பாஸ்ட் டேக் கார்டுகள் பொருத்தப்பட்டு விட்டன. அதன்படி தற்போது வரை சுமார் 8 கோடிக்கும் அதிகமான பாஸ்ட் டேக் கார்டுகள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன.  சுங்கச்சாவடிகளில் பணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில்  மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாஸ்ட்டேக் முறையை கொண்டுவந்தது.  பணம் வசூலிக்கும் முறையில் பல்வேறு சிக்கல்கள்  காலதாமதம் இவைகளை குறைக்கும் வகையில்   ஃபாஸ்ட் டேக் கார்டுகளை மத்திய அரசு கட்டாயப்படுத்தியது.  தேசிய நெடுஞ்சாலைகளை பொறுத்தவரை   சுங்கச்சாவடிகளில் காலதாமதங்கள் இன்னும் நீடித்து வருகிறது.

பாஸ்ட் டேக்

ஒரு வாகனத்தை ஓட்டும் டிரைவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட  பாஸ்ட் டேக் கார்டுகளை வாங்கி வைத்துக்கொண்டது என தெரிய வந்தது.  இப்படியான கார்டுகளை நீக்கம் செய்ய   ஒரு வாகனத்திற்கு ஒரு பாஸ்டேக் கார்டு தான்  வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது அனைத்து வாகன ஓட்டிகளும் தங்கள் பாஸ்டர் காடுகளை கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.   கேஒய்சி அப்டேட் செய்யப்படாத கார்டுகள் செயல் விளக்கமோ அல்லது பிளாக் லிஸ்ட்டோ செய்யப்படும்.  குறிப்பிட்ட வாகனங்கள் வேறு வேறு கார்டுகளை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவதை உறுதி செய்யப்பட்டதால் இந்த அதிரடி  நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.  இந்தியா முழுவதும் உள்ள வாகன ஓட்டிகள்  இன்று  ஜனவரி  31ம் தேதிக்குள் தங்கள் பாஸ்ட் டேக் கார்டை உடனடியாக கேஒய்சி அப்டேட் செய்து பயன்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
 பாஸ்ட் டேக்

காரில் பயணம் செய்தால், நீங்கள் இன்னும் Fastag KYC ஐ அப்டேட் செய்யவில்லை என்றால், இப்போதே சென்று செய்யுங்கள், இல்லையெனில் அடுத்த மாதம் முதல் அபராதம் விதிக்க நேரிடும்.இப்போதைக்கு, இந்த வேலையை முடிக்க உங்களுக்கு ஜனவரி 31 வரை அவகாசம் உள்ளது. இந்த தேதிக்குள் புதுப்பிக்கப்படாவிட்டால், இந்த ஃபாஸ்டாக் வேலை செய்வதை நிறுத்திவிடும்மேலும் நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஜனவரி 31ம் தேதிக்குள் ஃபாஸ்டாக் கேஒய்சி அப்டேட் செய்யப்படாவிட்டால், அனைத்து ஃபாஸ்டாக்களும் செயலிழக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. Fastagன் KYC ஐ நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால், அடுத்த மாதம் முதல் நீங்கள் எந்த டோல் பிளாசாவையும் கடக்கும்போது இரட்டை வரி செலுத்த வேண்டும். எந்தவொரு சுங்கச்சாவடிக்கும் 200 ரூபாய் வரி இருந்தால், நீங்கள் 400 ரூபாய் செலுத்த வேண்டும்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web