தனி நபராக மலையை குடைந்து 500 மீட்டர் சாலை அமைத்த கூலி தொழிலாளி.. சுவாரஸ்ய பின்னணி!

 
பிரகாஷ் கோஸ்வாமி

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள கிவார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் கோஸ்வாமி. கூலித் தொழிலாளியான இவர் தனது கிராமத்தை பிரதான சாலையுடன் இணைக்க 500 மீட்டர் மலையை வெட்டி சாலை அமைத்துள்ளார். சுத்தியல் மற்றும் உளி உதவியுடன் 9 மாதங்களில் கட்டப்பட்ட இந்த சாலையில் இப்போது 4 சக்கர வாகனங்களில் பயணிக்க முடியும்.

நான் அமைத்த ரோடு பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது.இருப்பினும் இன்னும் பணிகள் உள்ளன.இனி, இந்த ரோட்டில் 4 சக்கர வாகனங்கள் செல்லலாம்.இதன் மூலம் 300 பேர் பயனடைவார்கள்.இந்த சாலை அமைக்க அரசோ, கிராம மக்களோ உதவவில்லை. மாறாக, அவர்கள் என்னை கேலி செய்தார்கள். கூலி வேலை செய்யும் கோஸ்வாமி ஒரு நாளைக்கு ரூ.600 சம்பாதிக்கிறார். பணிக்குச் செல்வதற்கு முன், காலை 5 மணி முதல் 9 மணி வரை சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தில் இதுபோன்ற சாலை வசதி இல்லாத சுமார் 84 கிராமங்கள் உள்ளன. சில கிராம மக்கள் 10 கி.மீ தூரம் நடந்தே மெயின் ரோட்டை அடைகின்றனர். இதற்கிடையில், பாகேஷ்வர் மாவட்டத்தின் கண்டா பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக சாலை அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. 10 பெண்கள் ஒன்றிணைந்து வீதியை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web