தார் டிரம்மில் எதிர்பாராத விதமாக சிக்கிய தொழிலாளி.. 2 நாட்களாக தவித்த கொடூரம்..!

 
பீகார் தொழிலாளி

ஆந்திர மாநிலம் விஜயவாடாவின் என்டிஆர் மாவட்டம் ராயனபாடு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பீகாரைச் சேர்ந்த 40 வயது கூலித் தொழிலாளி இப்பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி அங்கிருந்த தார் டிரம் மீது விழுந்தார். வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டதால் கூச்சலிட்டார்.

ஆனால் எந்திரங்களின் சத்தத்தில் அவரது அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. இதனிடையே சாலைப் பணிகள் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டது. துரதிஷ்டவசமாக சக தொழிலாளர்கள் பகுதி நேர வேலையில் ஈடுபட்டதால் அவரது அலறல் யாருக்கும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக கூச்சலிட்ட அவர் ஒரு கட்டத்தில் சோர்வடைந்தார்.

இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் சத்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பின் போலீசார் வந்து போராடி தொழிலாளியை மீட்டனர். அதன்பின், சோர்வாக காணப்பட்டதால், அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web