கார் விபத்தில் சிறுவன் பலி!! பகீர் சிசிடிவி காட்சிகள்....

 
ஆதிசேகரன்

கேரள மாநிலம் திருவனந்தபுரம்  பூவாசல் கிராமத்தில் வசித்து வருபவர்   ஆதிசேகர்.இவர் இதே  பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஆகஸ்ட் 30ம் தேதி ஆதிசேகர்    கடைக்கு செல்வதற்காக தனது சைக்கிளில் சென்றுள்ளார்.அந்த சமயத்தில் அவரது பின்னால் வந்த கார் ஒன்று மோதியதில், காரின் சக்கரத்திலே நசுங்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் அறிந்து வந்த குடும்பத்தார் கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த விசாரணையில் அதிர்ச்சி தரும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.அத்துடன் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டதில் இச்சம்பவம் விபத்தல்ல திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்தது.   அந்த வீடியோவில்  அப்போது சிறுவனை மோதிய கார், வேண்டுமென்றே அவரை இடித்தது தெரியவந்தது. மேலும் சிறுவன் வரும்வரை காத்திருந்து, அந்த கார் புறப்பட்டுச் சென்றதும்  கண்டறியப்பட்டது. அதோடு கார் மோதிய பிறகு மீண்டும் பின்னோக்கி வந்து சிறுவன் மீது கார் ஏற்றப்பட்டது.   அந்த கார்  சிறுவனின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த பிரியரஞ்சனுடையது.   அவரை விசாரிக்க சென்றபோது, பிரியரஞ்சன் தலைமறைவு ஆகிவிட்டார்.  அவரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 

போலீஸ்
சிறுவன் ஒருமுறை பிரியரஞ்சனை அவரது மனைவி, குடும்பத்தார் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும், அதனாலே பழி வாங்க இதுபோல் செய்தது தெரியவந்தது. , 3 மாதங்களுக்கு முன்பு பிரியரஞ்சன், அந்த பகுதியில் இருக்கும் கோயில் அருகே அமர்ந்து அருந்தியதாகவும், பின்னர் கோயில் சுவற்றில் சிறுநீர் கழித்துள்ளார் இச்சம்பவத்தை நேரில் பார்த்த  சிறுவன் அனைவர் முன்பும் இந்த சம்பவத்தை சொன்னதால் அவருக்கு அவமானம் ஏற்பட்ட ஆத்திரத்தில் இவ்வாறு செய்தது  கண்டறியப்பட்டது.இதையடுத்து தற்போது தலைமறைவாகி உள்ள பிரியரஞ்சனை 3 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குடும்பத்தார் முன் அவமானப்படுத்தியதால் 3 மாதம் பிறகு திட்டம்போட்டு உறவுக்கார சிறுவனை கார் ஏற்றி கொலை செய்த உறவினரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web