"லட்டு வீடியோ சர்ச்சை".. கோபி, சுதாகர் மீது கொடுத்த புகாரை திரும்பப் பெற்றது பாஜக!
சுதாகர் மற்றும் கோபி மீது "லட்டு பாவங்கள்" என்ற வீடியோவை வெளியிட்டதாக தமிழக பா.ஜ.க.வினர் புகார் அளித்தனர், ஆனால் தற்போது அந்த புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக வெளியான தகவல் பக்தர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சமூக வலைதளங்களில் கருத்துகள் பரிமாறப்பட்டதுடன், சில மீம்கள் மற்றும் வீடியோக்களும் வெளியிடப்பட்டன. அதன்படி சுதாகர் மற்றும் கோபி இருவரும் தங்களது யூடியூப் சேனலில் "லட்டு பரிதபங்கள்" என்ற வீடியோவை வெளியிட்டனர். இந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அது நீக்கப்பட்டது.
இந்நிலையில், சுதாகர் மற்றும் கோபி மீது தமிழக பாஜகவினர் ஆந்திரா போலீசில் புகார் அளித்தனர். தற்போது அந்த புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது. எச். ராஜாவிடம் சுதாகரும், கோபியும் போனில் மன்னிப்புக் கேட்டதாகவும், அதன் பிறகு புகாரை வாபஸ் பெற முடிவு செய்ததாகவும் தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்தார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!