லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் போராட்டம்...!!

இந்தியா முழுவதும் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திடீரென தலைநகர் டெல்லியில் அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கானோர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊழியர்களுக்கான ஓய்வூதிய சலுகைகளை முற்றிலுமாக நிறுத்திவிட்டதால், தற்போது எந்தத் துறையிலும் சரியான பென்ஷன் முறை இல்லை. அதாவது ஓய்வுக்குப் பிறகு ஊதியம் எதுவுமே கிடைக்காது.
இதன்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் அடையாளப் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் திரண்டனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ரி நடைபெற்ற போராட்டத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இத்தனை பேர் கூடுவார்கள் என்று டெல்லி காவல்துறை எதிர்பார்க்காததால், தலைநகரில் போக்குவரத்து முடங்கியது. இந்த போராட்டத்தில் தமிழகத்தை அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என தமிழகத்திலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதே போல் டெல்லியிலும் பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...