லட்சுமி நாராயண யோகம்... இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் குவியும்!
நவம்பர் மாதத்தில் உருவாக உள்ள “லட்சுமி நாராயண யோகம்” பல ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம், உயர்வு ஆகியவற்றை அளிக்கும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
வேத ஜோதிடத்தில் மிகச் சிறந்த மங்களகரமான யோகமாகக் கருதப்படும் லட்சுமி நாராயண யோகம், சுக்கிரன் மற்றும் புதன் ஒரே ராசியில் இணையும் போது உருவாகிறது. சுக்கிரன் அழகு, செல்வம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரகராகவும், புதன் அறிவு, வாணிகம், பேச்சுத்திறன், கல்வி ஆகியவற்றின் காரகராகவும் விளங்குகிறார்.

அக்டோபர் 24 முதல் புதன் விருச்சிக ராசியில் பயணிக்க, நவம்பர் 26 அன்று சுக்கிரனும் அதே ராசிக்குள் பெயர்ச்சி ஆக உள்ளார். இதனால் விருச்சிக ராசியில் “லட்சுமி நாராயண ராஜயோகம்” உருவாகும். இந்த யோகத்தால் விருச்சிகம், மேஷம், சிம்மம், துலாம் ஆகிய 4 ராசிகள் அதிகம் பலனடையும்.
விருச்சிகம்:
இது உங்கள் லக்ன ஸ்தானத்தில் உருவாகுவதால் முழுமையான பலன்கள் கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள், வணிக முன்னேற்றம், குடும்ப மகிழ்ச்சி, திருமணமானவர்களுக்கு இனிமையான உறவு, திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். தன்னம்பிக்கை, ஆளுமைத் திறன், பேச்சின் வசீகரம் அதிகரிக்கும்.
மேஷம்:
எட்டாம் வீட்டில் உருவாகும் இந்த யோகம் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும், திடீர் பணவரவையும் அளிக்கும். வெளிநாட்டு அல்லது வேலை தொடர்பான பயணங்கள் நன்மை தரும். கடன் பிரச்சினைகள் தீர்ந்து நிதிநிலை உயரும். அரசு வேலை மற்றும் போட்டித் தேர்வுகளில் சாதனை செய்யும் வாய்ப்பு உண்டு.

சிம்மம்:
நான்காம் வீட்டில் உருவாகும் இந்த யோகம் சொத்து, வாகனம், வீட்டுக் கொள்முதல் வாய்ப்புகளை வழங்கும். தொழிலில் லாபம், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உறவினருடனான உறவு வலுப்பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
துலாம்:
நிதி சார்ந்த பலன்கள் கிடைக்கும். திடீர் பணவரவு, பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். கடின நேரங்களில் உறவினர்கள், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். இந்த யோகம் உங்கள் வாழ்க்கையில் செழிப்பையும் நிலைத்த செல்வத்தையும் உருவாக்கும். நவம்பர் மாதம் முழுவதும் இந்த லட்சுமி நாராயண யோகம் நன்மை தரும் காலமாக இருக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
