மெக்சிகோவில் நிலச்சரிவு.. கனமழை.. 41 பேர் பலி; 1000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்.. தொடரும் மீட்பு பணிகள்!

 
மெக்சிகோ மழை

மெக்சிகோ நாட்டின் மத்திய மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் பெரும் சேதம் ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் பல மாநிலங்களில் வெள்ளம் புகுந்ததுடன், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.

மத்திய ஹிடால்கோ மாநிலம் மிகுந்த பாதிப்பைச் சந்தித்துள்ளது. காசோன்ஸ் ஆறு கரைபுரண்டு ஓடியதால் கார்கள் அடித்து செல்லப்பட்டன. 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

மெக்சிகோ மழை

மேலும் 59 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள், 308 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார வலையமைப்பும் கடுமையாக சேதமடைந்துள்ளதால் 17 மாநிலங்களில் உள்ள 84 நகராட்சிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இன்னும் பலர் காணாமல் போயிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் அபாயம் நிலவுகிறது.

மெக்சிகோ மழை

வெள்ளத்தால் சிக்கிய மக்களை மீட்பதற்காக சுமார் 8,700 ராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?