திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு... தமிழ்நாடு–கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு!

 
திம்பம் மலைப்பாதை மண்சரிவு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழகம்–கர்நாடகாவை இணைக்கும் திம்பம் மலைப்பாதையில் கனமழையின் தாக்கத்தால் மண் சரிவு ஏற்பட்டதால் இரு மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கும் சத்தி–மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக விளங்கும் திம்பம் மலைச்சாலையில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியான இந்தச் சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள் பாய்ந்து செல்கின்றன.

மண்சரிவு

கனமழையினால் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக 7, 8, 20 மற்றும் 27ம் வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சாலை பகுதி சில இடங்களில் மறிக்கப்பட்டதால் வாகனப் போக்குவரத்து தடுமாறியது.

மண்சரிவு

தற்சமயம் வனத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைப் பணியகத்தினர் இணைந்து மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதை முழுமையாக சீராகும் வரை வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்க வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?